/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தடப்பெரும்பாக்கம் - கிருஷ்ணாபுரம் சாலையில் பள்ளங்களால் கடும் அவதி தடப்பெரும்பாக்கம் - கிருஷ்ணாபுரம் சாலையில் பள்ளங்களால் கடும் அவதி
தடப்பெரும்பாக்கம் - கிருஷ்ணாபுரம் சாலையில் பள்ளங்களால் கடும் அவதி
தடப்பெரும்பாக்கம் - கிருஷ்ணாபுரம் சாலையில் பள்ளங்களால் கடும் அவதி
தடப்பெரும்பாக்கம் - கிருஷ்ணாபுரம் சாலையில் பள்ளங்களால் கடும் அவதி
ADDED : செப் 11, 2025 03:03 AM

பொன்னேரி:தடப்பெரும்பாக்கம் - கிருஷ்ணாபுரம் சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளங்களால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கத்தில் இருந்து, கிருஷ்ணாபுரம் செல்லும் சாலை பராமரிப்பின்றி படுமோசமான நிலையில் உள்ளது. இச்சாலை, பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலை மற்றும் பொன்னேரி - செங்குன்றம் நெடுஞ்சாலையை இணைக்கிறது.
இந்த வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் பயணிக்கின்றன. கடந்த மாதம் தடப்பெரும்பாக்கம் ஏரியில் குவாரி செயல்பட்டது. அதிக சுமையுடன் சென்ற மண் லாரிகளால் சாலை சேதமடைந்தது.
இச்சாலையின் பல்வேறு பகுதிகளில் மரண பயத்தை ஏற்படுத்தும், பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. பள்ளங்களை தவிர்க்க வாகன ஓட்டிகள், மாற்று திசையில் பயணிக்கும் நிலை உள்ளது. இதனால், எதிரே வரும் வாகனங்களுடன் மோதி, விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மேலும், கார்களின் அடிப்பகுதி பள்ளங்களில் சிக்கி சேதமடைகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பள்ளங்களில் தடுமாறி விழுந்து, சிறு சிறு காயமடைந்து வருகின்றனர்.
எனவே, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க வேண்டும். மேலும் கனரக வாகனங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.