/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பொன்னேரி நகராட்சியில் கமிஷனர் பணியிடம் காலி சாலை, மின்விளக்கு சீரமைப்பு பணிகளில் தொய்வு பொன்னேரி நகராட்சியில் கமிஷனர் பணியிடம் காலி சாலை, மின்விளக்கு சீரமைப்பு பணிகளில் தொய்வு
பொன்னேரி நகராட்சியில் கமிஷனர் பணியிடம் காலி சாலை, மின்விளக்கு சீரமைப்பு பணிகளில் தொய்வு
பொன்னேரி நகராட்சியில் கமிஷனர் பணியிடம் காலி சாலை, மின்விளக்கு சீரமைப்பு பணிகளில் தொய்வு
பொன்னேரி நகராட்சியில் கமிஷனர் பணியிடம் காலி சாலை, மின்விளக்கு சீரமைப்பு பணிகளில் தொய்வு
ADDED : ஜூன் 16, 2025 11:27 PM
பொன்னேரி, பொன்னேரி நகராட்சியில், ஒரு மாதமாக கமிஷனர் பணியிடம் காலியாக இருப்பதால் சாலை, தெருவிளக்கு சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.
பொன்னேரி நகராட்சியில், 27 வார்டுகளில் 300க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. அவற்றில், 10,027 குடியிருப்புகள், 1,721 வணிக நிறுவனங்கள் உள்ளன.
குடியிருப்பு பகுதிகளுக்கு தேவையான குடிநீர், மின்விளக்கு வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தரவேண்டும். கடந்த மாதம், இங்கு பதவியில் இருந்து நகராட்சி கமிஷனர், பணியிடம் மாறுதல் பெற்றார். திருநின்றவூர் நகராட்சி கமிஷனர் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
கூடுதல் பொறுப்பு என்பதால், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே பொன்னேரி அலுவலகம் வந்து செல்கிறார். இதனால், நகராட்சியில் குடிநீர், சாலை, மின்விளக்கு சீரமைப்பு பணிகளை சரிவர கண்காணிக்க முடிவதில்லை.
பொன்னேரி நகராட்சி பகுதியில், 300க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் எரியாமல், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகள் இருண்டு கிடக்கின்றன.
கழிவுநீர் கால்வாய்களில் செல்வதைவிட, சாலைகளில் பாய்ந்தோடுகிறது. இவை குறித்து முறையான கண்காணிப்பு இல்லை. நகராட்சி கமிஷனர் பணியிடம் காலியாக இருப்பதால், பொதுமக்கள் யாரிடம் புகார் தெரிவிப்பது என, தெரியாமல் தவிக்கின்றனர்.
பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீதும் நடவடிக்கை இன்றி கிடக்கிறது. மழைக்காலம் துவங்க உள்ள நிலையில், மழைநீர் கால்வாய்களை துார்வாருதல், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
எனவே, தாலுகா தலைமையிடமாக பொன்னேரி இருப்பதால், நகராட்சிக்கு புதிய கமிஷனரை நியமிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.