ADDED : பிப் 05, 2024 11:25 PM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே 'போலீஸ் பூத்' இயங்கி வந்தது. பூத் அமைந்துள்ள இடத்தின் கீழ் கால்வாய் பணி மேற்கொள்வதற்காக, ஆறு மாதங்களுக்கு முன் போலீஸ் பூத்தின் பக்கவாட்டு சுவர்கள் இடிக்கப்பட்டன.
பின் சுவர்கள் அடைக்கப்படாததால், 'போலீஸ் பூத்' செயல்படவில்லை. பஜார் பகுதிக்கு வருபவர்கள், உடைக்கப்பட்ட சுவர் வழியாக, 'போலீஸ் பூத்' உள்ளே சென்று சிறுநீர் கழித்து வந்தனர். அதனால், துர்நாற்றம் வீசியதுடன் பள்ளி மாணவர்களின் சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தினர், போலீஸ் பூத்தில் துாய்மை பணிகள் மேற்கொண்டு, உடைக்கப்பட்டிருந்த சுவற்றை தற்காலிகமாக அடைத்தனர்.