/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 24, 2024 11:53 PM

மீஞ்சூர்:மீஞ்சூரில் உள்ள அத்திப்பட்டு புதுநகரில் பாரத், ஹிந்துஸ்தான் உள்ளிட்ட பெட்ரோலிய முனையங்கள் உள்ளன. இங்கிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பெட்ரோலிய பொருட்கள் டேங்கர் லாரிகள் வாயிலாக கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த டேங்கர் லாரி டிரைவர்கள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'ஹிட் அன் ரன்' சட்டத்தை கைவிடக்கோரி, ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறியதாவது:
குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கும் நாங்கள், எதிர்பாராத விதமாக நேரிடும் விபத்துகளுக்கு, பல லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 10 ஆண்டு சிறை தண்டனை என, சட்டம் இயற்றப்பட்டு உள்ளதால், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.
இதனால் ஏற்பட்ட அச்சம் மற்றும் பதற்றத்துடன் வாகனங்களை இயக்கும்போது, விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் உள்ள இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து, லாரி டிரைவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பெட்ரோல், டீசல் ஆயில் ஏற்றி செல்லும் டேங்கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பெட்ரோல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளும் பாதித்தன.