/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பெட்ரோல் 'ஆட்டை' ஆவடியில் தொடரும் பீதி பெட்ரோல் 'ஆட்டை' ஆவடியில் தொடரும் பீதி
பெட்ரோல் 'ஆட்டை' ஆவடியில் தொடரும் பீதி
பெட்ரோல் 'ஆட்டை' ஆவடியில் தொடரும் பீதி
பெட்ரோல் 'ஆட்டை' ஆவடியில் தொடரும் பீதி
ADDED : ஜூன் 08, 2025 02:20 AM

ஆவடி:ஆவடி, மேற்கு காந்தி நகர், பெரியார் தெரு ஒன்று முதல் 10 தெருக்களில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், ஆறு மாதமாக வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்களில் இருந்து, அடிக்கடி பெட்ரோல் திருடப்பட்டு வருவதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டினர்.
அதேபோல, 'ஏசி' இணைப்பில் இருக்கும் காப்பர் கம்பி உள்ளிட்ட, பல்வேறு பொருட்கள் திருட்டு போகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனங்களில் இருந்து மர்ம நபர்கள் பெட்ரோல் திருடும் காட்சிகள் 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி இருந்தன.
இதனால், பகுதிவாசிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தனர்.