ADDED : பிப் 05, 2024 11:28 PM

சோளிங்கர்: வேலுார் மாவட்டம், பொன்னை அடுத்த வள்ளிமலை முருகன் கோவில் வளாகத்தில் உள்ள சரவணபொய்கை திருக்குளம் பகுதியில் நேற்று, 100க்கும் மேற்பட்ட சிவனடிகளார் நித்ய வழிபாடு பூஜை நடத்தினர்.
அப்போது, சிவபுராணம் ஒரு மணி நேரம் கூட்டாக பாடினர். கோவிலுக்கு வந்த பக்தர்களும் சிவனடியார்களுடன் சேர்ந்து சிவன் குறித்து பக்தி பாடல் பாடி வழிப்பட்டனர்.