/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அண்ணனை பீர்பாட்டிலால் தாக்கிய பாசக்கா தம்பி கைது அண்ணனை பீர்பாட்டிலால் தாக்கிய பாசக்கா தம்பி கைது
அண்ணனை பீர்பாட்டிலால் தாக்கிய பாசக்கா தம்பி கைது
அண்ணனை பீர்பாட்டிலால் தாக்கிய பாசக்கா தம்பி கைது
அண்ணனை பீர்பாட்டிலால் தாக்கிய பாசக்கா தம்பி கைது
ADDED : மே 22, 2025 10:28 PM
திருத்தணி:திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தோட்டக்கரை கைலாசநாதர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் மகன் சம்பத், 24. இவரது சகோதரர் சந்தோஷ், 21. இவர்கள் இருவரும் பழைய பொருட்களை சேகரித்து இரும்பு கடையில் விற்பனை செய்து வந்தனர்.
இரு நாட்களுக்கு முன் சந்தோஷ், அவரது மனைவி பாலம்மா, 19, சகோதரர் சம்பத் மற்றும் உறவினர் மணி ஆகியோர் திருத்தணி நகருக்கு வந்து பழைய பொருட்களை சேகரித்து, இரும்பு கடையில் விற்பனை செய்து வந்தார்.
நேற்று மதியம், சம்பத் தனது தம்பி மனைவி பாலம்மாவிடம், எனக்கு பசியாக இருக்கிறது, ஓட்டலுக்கு சென்று சாப்பாடு வாங்கி வருமாறு கூறினார். அப்போது போதையில் இருந்த சந்தோஷ், எனது மனைவியை வேலை வாங்குகீறாயா என ஆத்திரமடைந்து கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் சம்பத் தலை மற்றும் காது பகுதியில் தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த சம்பத்யை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவிக்கு பின் மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து சந்தோைஷ கைது செய்து விசாரித்து வருகின்றனர்.