/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அங்கன்வாடி கட்டுமான பணி பள்ளங்களால் பெற்றோர் பீதி அங்கன்வாடி கட்டுமான பணி பள்ளங்களால் பெற்றோர் பீதி
அங்கன்வாடி கட்டுமான பணி பள்ளங்களால் பெற்றோர் பீதி
அங்கன்வாடி கட்டுமான பணி பள்ளங்களால் பெற்றோர் பீதி
அங்கன்வாடி கட்டுமான பணி பள்ளங்களால் பெற்றோர் பீதி
ADDED : ஜூன் 15, 2025 02:47 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டில் இருந்து ஆர்.கே.பேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கர்லம்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் அருகே உள்ள மாநில நெடுஞ்சாலையை ஒட்டி, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
இதில், 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றன. இந்த அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்து வந்தது. தற்போது, சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் துவங்கியுள்ளன.
இதற்காக, அங்கன்வாடி மையத்தின் நுழைவாயில் பகுதியில், 10க்கும் மேற்பட்ட பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.
இதனால், குழந்தைகளின் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, சுற்றுச்சுவர் கட்டி முடிக்கும் வரை, அங்கன்வாடி மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.