Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கல்விக்கடனுக்கு தேவை 'சிபில் ஸ்கோர்' தளர்வு கொடுக்க பெற்றோர் எதிர்பார்ப்பு

கல்விக்கடனுக்கு தேவை 'சிபில் ஸ்கோர்' தளர்வு கொடுக்க பெற்றோர் எதிர்பார்ப்பு

கல்விக்கடனுக்கு தேவை 'சிபில் ஸ்கோர்' தளர்வு கொடுக்க பெற்றோர் எதிர்பார்ப்பு

கல்விக்கடனுக்கு தேவை 'சிபில் ஸ்கோர்' தளர்வு கொடுக்க பெற்றோர் எதிர்பார்ப்பு

ADDED : மே 23, 2025 10:07 PM


Google News
திருவாலங்காடு:கல்வி நிறுவனங்களில் படிக்க இடம் கிடைத்தும், போதியளவில் பணம் இல்லாத காரணத்தால், மாணவர்கள் படிப்பை விட்டு விடக் கூடாது என்பதற்காக, வங்கிகள் வாயிலாக, மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

கல்வி கடனுக்கு, 'வித்யாலட்சுமி போர்ட்டல்' வாயிலாக, உரிய ஆவணங்களுடன் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனத்தில் அட்மிஷன் பெறுவதற்கு முன், கல்வி கடன் பெற விண்ணப்பிக்க முடியாது.

வங்கிகளில் கல்வி கடன் பெறுவதற்கு, முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் உள்ள பாடப்பிரிவில் அட்மிஷன் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன.

படிப்பை முடித்த ஓராண்டு அல்லது வேலைக்கு சென்ற ஆறு மாதத்தில் இருந்து கல்வி கடனை திருப்பிச் செலுத்த துவங்க வேண்டும். ஆனால், கல்விக்கடன் பெறுவதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதிலும், 'சிபில் ஸ்கோர்' முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரி கூறியதாவது:

மாணவர்களின் பெற்றோரின், 'சிபில் ஸ்கோர்' 700க்கு மேல் இருந்தால் தான், கல்வி கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. 'சிபில் ஸ்கோர்' என்பது 300 - 900 வரையிலான கணக்கீட்டை கொண்டது.

இதை அதிகமாக வைத்திருந்தால் எளிதாக கடன் கிடைக்கும். வட்டி குறையவும் வாய்ப்புள்ளது. 700 அல்லது அதற்கும் மேல் 'சிபில் ஸ்கோர்' இருந்தால், வங்கிகள் கடன் வழங்க தயங்காது. அதற்கு கீழ் இருக்கும் பட்சத்தில், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி கடன் கிடைக்க வாய்ப்பு குறைவு.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றாக படிக்க கூடிய மாணவருக்கு கல்வி கடன் தேவைப்படும் பட்சத்தில், இதுபோன்ற விதிமுறையால், அவரின் பெற்றோரின் 'சிபில் ஸ்கோர்' 700க்கும் குறைவாக இருந்தால், குறிப்பிட்ட மாணவருக்கு கல்வி கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இதனால், அவரின் படிப்பை எப்படி தொடர முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, இந்த விதிமுறையை சற்று தளர்த்த வேண்டும்.

- ஆர்.விஜயகுமார்,

சமூக ஆர்வலர்,

திருவாலங்காடு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us