/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திறப்பு விழா காணாத ஊராட்சி அலுவலகம்திறப்பு விழா காணாத ஊராட்சி அலுவலகம்
திறப்பு விழா காணாத ஊராட்சி அலுவலகம்
திறப்பு விழா காணாத ஊராட்சி அலுவலகம்
திறப்பு விழா காணாத ஊராட்சி அலுவலகம்
ADDED : பிப் 05, 2024 11:18 PM

திருத்தணி,: திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு ஊராட்சி மன்ற அலுவலகம், பழுதடைந்த கட்டடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது.
இது குறித்து, பூனிமாங்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிதாக கட்டடம் கட்டித்தர வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அண்ணா மறுமலர்ச்சி- - 2 திட்டத்தில், -2022- - 23 ஆண்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு, மாவட்ட நிர்வாகம் 28.40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
இதை தொடர்ந்து புதிய ஊராட்சி மன்ற கட்டடத்திற்கு டெண்டர் விடப்பட்டு, கடந்த நான்கு மாதத்திற்கு முன் பணி துவங்கப்பட்டது. தற்போது பூனிமாங்காடு ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் பணிகள், முழுமையாக முடிந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. ஆனால் அமைச்சர் வருகை தேதி கிடைக்காததால், புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் பூட்டியே கிடப்பதாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பூனிமாங்காடு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.