/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பழவேற்காடு - பசியாவரம் பாலம்: அணுகுசாலை பணி தீவிரம்பழவேற்காடு - பசியாவரம் பாலம்: அணுகுசாலை பணி தீவிரம்
பழவேற்காடு - பசியாவரம் பாலம்: அணுகுசாலை பணி தீவிரம்
பழவேற்காடு - பசியாவரம் பாலம்: அணுகுசாலை பணி தீவிரம்
பழவேற்காடு - பசியாவரம் பாலம்: அணுகுசாலை பணி தீவிரம்
ADDED : ஜன 27, 2024 11:21 PM

பழவேற்காடு, பழவேற்காடு மீனவப்பகுதியில், பசியாவரம், இடமணி, இடமணி ஆதிதிராவிடர் காலனி, ரஹ்மத் நகர், சாட்டன்குப்பம் ஆகிய ஐந்து மீனவ கிராமங்கள் ஏரியின் மையப்பகுதியில் தனித்தீவாக அமைந்து உள்ளன.
மேற்கண்ட மீனவ கிராமத்தினர் வசதிக்காக, சுனாமி மறுவாழ்க்கை வசதிகள் திட்டத்தின் வாயிலாக, 18.20 கோடி ரூபாய் நிதியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி 2020ல் துவங்கப்பட்டது.
பொன்னேரி - பழவேற்காடு சாலையில் இருந்து, பசியாவரம் கிராமம் வரை, 7 மீ., அகலம், 432 மீ. நீளமான ஓடுபாதையுடன் பாலத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
ஏரியின் குறுக்கே, 20 கான்கிரீட் துாண்கள், அதன்மீது ஓடுதளம், பக்கவாட்டு பகுதிகளில் தடுப்பு சுவர் ஆகியவற்றிற்கான பணிகள் தற்போது முடிந்து உள்ளன.
பாலத்தின் இருபுறமும் அணுகுசாலைக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருபுறமும் மண் கொட்டி நிரப்பி, சரிவுப்பகுதிகளில் சமன்படுத்தப்பட்டு வருகிறது.
அணுகு சாலையின் பக்கவாட்டு சரிவுப்பகுதிகளில் மண் அரிப்பை தடுக்க கான்கிரீட் கட்டுமானங்கள் தயார் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.