/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ரூ.78 கோடியில் 526 கிராம சேவை மையங்கள் 286 பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் அவலம் ரூ.78 கோடியில் 526 கிராம சேவை மையங்கள் 286 பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் அவலம்
ரூ.78 கோடியில் 526 கிராம சேவை மையங்கள் 286 பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் அவலம்
ரூ.78 கோடியில் 526 கிராம சேவை மையங்கள் 286 பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் அவலம்
ரூ.78 கோடியில் 526 கிராம சேவை மையங்கள் 286 பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் அவலம்
ADDED : ஜூன் 30, 2025 11:18 PM

கடம்பத்துார்,திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்களிலும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், தலா 14.55 லட்சம் மதிப்பில், 76.53 கோடியில் கிராம சேவை மையங்கள் கட்டப்பட்டன. இந்த மையங்கள், 1.31 கோடியில் புதுப்பிக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராததால், 77.84 கோடி ரூபாய் வீணாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளிலும், கடந்த 2014 - 15ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், தலா 14.55 லட்சம் ரூபாய் வீதம், 76.53 கோடியில் கிராம சேவை மையங்கள் கட்டப்பட்டன.
இதன் மூலம் பகுதிவாசிகள் தங்களுக்கு தேவையான ஜாதி, இருப்பிடம் போன்ற சான்றிதழ்கள் பெறும் வகையில் கட்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்து 10 ஆண்டுகளாகியும், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராததால் 'குடி'மகன்களின் கூடாரமாக மாறியுள்ளது.
சில ஊராட்சிகளில் நெல் கொள்முதல் நிலையமாகவும், ஊராட்சி அலுவலகமாகவும், தங்குமிடமாகவும் மாறியுள்ளது.
இந்த கிராம சேவை மையங்களை ஊரக வளர்ச்சித்துறையினர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் ஒத்துழைப்புடன் பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்து ஒப்படைக்கப்பட்டது.
தற்போது, இந்த கிராம சேவை மையங்கள், தலா 25,000 ரூபாய் மதிப்பீட்டில், 526 கிராம சேவை மையங்களும், 1.31 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மையங்களில் மகளிர் குழு சம்பந்தம்பான கூட்டங்கள் நடத்தப்படும்.
மேலும் சேமிப்புகளை உருவாக்குதல், கடன் வழங்குதல், கணக்கு பதிவேடுகள் பராமரிப்பு போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் போன்ற அமைப்புகளை ஊக்குவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஏழைகளின் வருமானத்தை உயர்த்தி, அவர்களின் நிதி மற்றும் ஜாதி, இருப்பிட சான்றிதழ் போன்ற சேவைகளை பெற வழிசெய்கிறது.
இதன் தொடர்ச்சியாக, கிராம சேவை மையங்கள் அனைத்தும், 'பாரத் நெட்' மூலம் இணைக்கப்பட்டு, இணையதள சேவை மையமாக செயல்பட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தினர் தெரிவித்தனர்.
ஆனால், கிராம சேவை மையங்கள் சீரமைக்கப்பட்டும், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் பயன்பாடில்லாமல் பூட்டிய கிடக்கிறது. சில ஊராட்சிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது, பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராம சேவை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக ஊரக வாழ்வாதார இயக்க அலுவலர் கூறியதாவது:
கிராம சேவை மையங்களில் செயல்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில ஊராட்சிகளில் அலுவலகம் இல்லாததால், ஊராட்சி அலுவலகமாக மாறியுள்ளது.
விரைவில் புதிய ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டவுடன் மாற்றப்படும். மேலும், மகளிர் சுயஉதவிக் குழுவினர் மூலம் சான்றிதழ் உட்பட பல பணிகளுக்கு பயன்பாட்டிற்கு கொண்டுவர விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.