/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 'நம்ம ஊர் திருவிழா' நிகழ்ச்சி கலைக்குழு பங்கேற்க முகாம் 'நம்ம ஊர் திருவிழா' நிகழ்ச்சி கலைக்குழு பங்கேற்க முகாம்
'நம்ம ஊர் திருவிழா' நிகழ்ச்சி கலைக்குழு பங்கேற்க முகாம்
'நம்ம ஊர் திருவிழா' நிகழ்ச்சி கலைக்குழு பங்கேற்க முகாம்
'நம்ம ஊர் திருவிழா' நிகழ்ச்சி கலைக்குழு பங்கேற்க முகாம்
ADDED : மார் 19, 2025 06:18 PM
திருவள்ளூர்:'நம்ம ஊர் திருவிழா' நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுவினர் பதிவு செய்ய, வரும் 22ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில், தமிழகத்தில் எட்டு இடங்களில், நம்ம ஊர் திருவிழா நடத்தப்பட்டது. நடப்பாண்டும், இந்த இடங்களில் கலை திருவிழா நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், வில்லுப்பாட்டு, ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைக்குழுவினர், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, வரும் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில், திருவள்ளூர் எம்.எஸ்.கே., திருமண மண்டபத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மாவட்ட அளவிலான தேர்வில் பங்குபெற விரும்பும் கலைக்குழுக்கள், கலை பண்பாட்டு துறையின் www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள 'கூகுள் பார்ம்'ல், வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் அல்லது திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் உதவி இயக்குநர் நீலமேகன் என்பவரை, 94446 68932 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.