/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/20 கழிப்பறைகளுடன் சுகாதார வளாகம் திறப்பு20 கழிப்பறைகளுடன் சுகாதார வளாகம் திறப்பு
20 கழிப்பறைகளுடன் சுகாதார வளாகம் திறப்பு
20 கழிப்பறைகளுடன் சுகாதார வளாகம் திறப்பு
20 கழிப்பறைகளுடன் சுகாதார வளாகம் திறப்பு
ADDED : ஜன 05, 2024 08:24 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி, 10வது வார்டு, பேருந்து நிலையத்தில் இருந்து காக்களூர் சாலையில் துாய்மை இந்தியா திட்டத்தில், 27.50 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இங்கு, 20 கழிப்பறை வசதிகளுடன் கட்டப் பணி நிறைவடைந்தது.
இதையடுத்து, புதிய சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் நிகழ்ச்சி, நகராட்சி தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.
திருவள்ளூர் தி.மு.க.,- எம்.எல்.ஏ., ராஜேந்திரன் சுகாதார வளாகத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நகராட்சி கமிஷனர் சுரேந்திர ஷா, நகராட்சி துணை தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.