/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு வரலாற்று சிறப்புமிக்கது: ஜி.கே.வாசன்அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு வரலாற்று சிறப்புமிக்கது: ஜி.கே.வாசன்
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு வரலாற்று சிறப்புமிக்கது: ஜி.கே.வாசன்
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு வரலாற்று சிறப்புமிக்கது: ஜி.கே.வாசன்
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு வரலாற்று சிறப்புமிக்கது: ஜி.கே.வாசன்
ADDED : ஜன 24, 2024 10:54 PM
திருவள்ளூர்:நேர்மை, எளிமை, வெளிப்படைத்தன்மையை பின்பற்றி வருபவர் நம் பிரதமர் நரேந்திர மோடி என, த.மா.காங்., தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் நடந்த கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்ததாவது:
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு என்பது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. அது குறித்து தமிழக முதல்வர் ஒரு தவறான கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
ஆனால், தி.மு.க., அரசு விளம்பரத்திற்காக, அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்த காரணத்தால், தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதிப்படுகின்றனர்.
சட்டசபை நிகழ்வுகள் நேரலையில் முழுமையாக ஒளிபரப்ப வேண்டும். அமைச்சர்களின் செயல்பாடுகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவிற்கு ஒரே மாடல் தான். நேர்மை, எளிமை, வெளிப்படைத்தன்மை இருந்தால், வளமான தமிழகம், வலிமையான பாரதம் அமையும்.
அந்த மாடலை கொடுத்தவர் பெருந்தலைவர் காமராஜர். அதை நம் பிரதமர் பின்பற்றி வருகிறார். வேறு எந்த மாடலையும் மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. ஏனென்றால், அதில் நேர்மை, எளிமை, வெளிப்படைத்தன்மை இல்லை.
லோக்சபா தேர்தல் குறித்து, தொண்டர்கள், கட்சியின் நிர்வாகிகளை கலந்தாலோசித்து வருகிறோம். கூட்டணி குறித்தும், தொகுதிகள் குறித்தும் உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.