ADDED : பிப் 11, 2024 11:14 PM
கும்மிடிப்பூண்டி: ஆந்திர மாநிலம், இருக்கம் தீவில் வசித்து வந்தவர் வல்லியம்பேடு காந்தி, 62. நேற்று முன்தினம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ஜீப் வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.
படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.