ADDED : ஜன 19, 2024 01:36 AM
பொன்னேரி:மீஞ்சூர் அடுத்த காட்டூர் பகுதியில் வசித்தவர் பலராமன், 75. பொன்னேரி அடுத்த ஆத்திரேயமங்கலம் சந்திப்பு அருகே, நேற்று மாலை சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார்.
அங்கு, சாலையை கடக்க முயன்றபோது, மீஞ்சூரில் இருந்து பொன்னேரி நோக்கி சென்ற மினி லாரி மோதியது. பலத்த காயம் அடைந்தவர், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


