/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பெயர் பலகையில் தலைவர் பெயர்கள் மாற்றம் செய்ய தயங்கும் அதிகாரிகள் பெயர் பலகையில் தலைவர் பெயர்கள் மாற்றம் செய்ய தயங்கும் அதிகாரிகள்
பெயர் பலகையில் தலைவர் பெயர்கள் மாற்றம் செய்ய தயங்கும் அதிகாரிகள்
பெயர் பலகையில் தலைவர் பெயர்கள் மாற்றம் செய்ய தயங்கும் அதிகாரிகள்
பெயர் பலகையில் தலைவர் பெயர்கள் மாற்றம் செய்ய தயங்கும் அதிகாரிகள்
ADDED : ஜூன் 16, 2025 11:21 PM

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டு 42 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஊராட்சி பெயர் பலகையில் தலைவர் பெயர் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது.
ஊராட்சிகளில் தலைவர் பதவி காலம், கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. அதன்பின், தனி அலுவலர்களால் ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ளப்படுகிறது. ஊராட்சியில் உள்ள கிராமப்புற எல்லையோர பகுதியில், பெயர் பலகையில் ஊராட்சி பெயர், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பெயர்கள் இடம்பெற்று இருந்தன.
தனி அலுவலர்கள் ஊராட்சி நிர்வாகத்தை கவனித்து வருவதால், தற்போது அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் உள்ள பெயர் பலகைகளில், அந்தந்த ஊராட்சி பெயருடன், தனி அலுவலர் என, எழுதப்பட்டுள்ளது.
ஆனால், திருவாலங்காடு பகுதியில் உள்ள பல ஊராட்சிகளில், எல்லையோர பெயர் பலகையில், முன்னாள் ஊராட்சி தலைவர் பெயர் மாற்றப்படாமல் உள்ளது. இதை ஒன்றிய அதிகாரிகள் கவனித்து, உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.