/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அரசு சிமெண்ட் கிடைக்கல? இரும்பு கம்பி தரமில்லை! கடம்பத்துாரில் பயனாளிகள் புலம்பல் அரசு சிமெண்ட் கிடைக்கல? இரும்பு கம்பி தரமில்லை! கடம்பத்துாரில் பயனாளிகள் புலம்பல்
அரசு சிமெண்ட் கிடைக்கல? இரும்பு கம்பி தரமில்லை! கடம்பத்துாரில் பயனாளிகள் புலம்பல்
அரசு சிமெண்ட் கிடைக்கல? இரும்பு கம்பி தரமில்லை! கடம்பத்துாரில் பயனாளிகள் புலம்பல்
அரசு சிமெண்ட் கிடைக்கல? இரும்பு கம்பி தரமில்லை! கடம்பத்துாரில் பயனாளிகள் புலம்பல்
ADDED : ஜூன் 25, 2025 09:32 PM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகள், அரசு சிமென்ட் கிடைக்காமலும், இரும்பு கம்பிகள் தரமில்லை எனவும் புலம்பி வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியத்தில் 43 ஊராட்சிகளில், கடந்த 2024 - 25ம் ஆண்டில் 452 வீடுகள், 2025 - 26ம் ஆண்டில் 420 வீடுகள் என, மொத்தம் 872 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில், ஒரு வீட்டுக்கு 140 அரசு சிமென்ட் மூட்டைகள், 8 இன்ச் கம்பி 110 கிலோ, 12 இன்ச் கம்பி 220 கிலோ என, மொத்தம் 330 கிலோ கம்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதன் விலை முறையே, ஒரு மூட்டை சிமென்ட் விலை 285 ரூபாய் மற்றும் ஏற்ற, இறக்க கூலி மூட்டைக்கு 30 ரூபாய் வசூலிப்பதாக பயனாளிகள் தெரிவித்தனர்.
இதில், 140 சிமென்ட் மூட்டைகள் முழுமையாக வழங்காமல், 60 - 100 மூட்டைகள் மட்டுமே வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிமென்ட் மூட்டைகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், கம்பியும் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து துருப்பிடித்துள்ளதாகவும் பயனாளிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இந்நிலையில், 200 வீடுகள் கட்டும் பணிகள் துவக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசு தொகுப்பு வீடுகளுக்கு வழங்கும் சிமென்ட், கம்பி குறித்து ஆய்வு செய்து, தரமானதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒன்றிய அதிகாரி,
கடம்பத்தூர்.