/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ செய்தி எதிரொலி மின்கம்பங்களில் கட்டப்பட்ட விளம்பர தட்டிகள் அகற்றம் செய்தி எதிரொலி மின்கம்பங்களில் கட்டப்பட்ட விளம்பர தட்டிகள் அகற்றம்
செய்தி எதிரொலி மின்கம்பங்களில் கட்டப்பட்ட விளம்பர தட்டிகள் அகற்றம்
செய்தி எதிரொலி மின்கம்பங்களில் கட்டப்பட்ட விளம்பர தட்டிகள் அகற்றம்
செய்தி எதிரொலி மின்கம்பங்களில் கட்டப்பட்ட விளம்பர தட்டிகள் அகற்றம்
ADDED : மார் 22, 2025 11:43 PM

ஆவடி, சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், பட்டாபிராம் முதல் சேக்காடு வரை 1 கி.மீ.,க்கு மின்கம்பங்களில் தனியார் நிறுவனம் சார்பில் விளம்பர தட்டிகள் கட்டப்பட்டு இருந்தது. சென்னை - திருவள்ளூர் மாவட்டத்தை இணைக்கும் பகுதி என்பதால், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த விளம்பர தட்டிகள் வாயிலாக, வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு, விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. மேலும், காற்று வேகமாக வீசும் போது, விளம்பர தட்டிகள் அறுந்து, வாகன ஓட்டிகள் மீது விழும் சூழல் ஏற்பட்டது.
எனவே, இந்த விளம்பர தட்டிகளை அகற்ற வேண்டும் என, நம் நாளிதழில், கடந்த 19ம் தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மின் கம்பங்களில் கட்டப்பட்டு இருந்த விளம்பர தட்டிகளை, மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
தற்போது, இந்த அத்துமீறல் தொடராமல் தடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.