/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ செய்தி எதிரொலி அரசு பெண்கள் பள்ளி வாயில் முன் கால்வாய் சீரமைப்பு பணி துவக்கம் செய்தி எதிரொலி அரசு பெண்கள் பள்ளி வாயில் முன் கால்வாய் சீரமைப்பு பணி துவக்கம்
செய்தி எதிரொலி அரசு பெண்கள் பள்ளி வாயில் முன் கால்வாய் சீரமைப்பு பணி துவக்கம்
செய்தி எதிரொலி அரசு பெண்கள் பள்ளி வாயில் முன் கால்வாய் சீரமைப்பு பணி துவக்கம்
செய்தி எதிரொலி அரசு பெண்கள் பள்ளி வாயில் முன் கால்வாய் சீரமைப்பு பணி துவக்கம்
ADDED : மே 20, 2025 12:00 AM

ஊத்துக்கோட்டை,ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், திருவள்ளூர் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளி நுழைவாயிலில் கழிவுநீர் கால்வாய் தாழ்வாக இருந்ததால், அடிக்கடி கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, பள்ளி வளாகத்தில் கழிவுநீர் தேங்குகிறது. மழைக்காலங்களில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழைநீருடன், கழிவுநீர் சேர்ந்து பள்ளி வளாகத்தில் குளம் போல் தேங்கி விடுகிறது.
இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் இருந்து வந்தது. மேலும், சுகாதாரமற்ற சூழலில் மாணவியர் பயின்று வந்தனர். இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, ஊத்துக்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நுழைவாயிலில் உள்ள கால்வாயை புதுப்பித்து கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,5.90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது, கால்வாய் புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளி துவங்கும் முன், கால்வாய் பணி முடிக்கப்படும் என, பேரூராட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.