/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தத்தமஞ்சி நீர்த்தேக்கத்திற்கு மழைநீர் செல்லும் கால்வாய் பராமரிப்பில் அலட்சியம் தத்தமஞ்சி நீர்த்தேக்கத்திற்கு மழைநீர் செல்லும் கால்வாய் பராமரிப்பில் அலட்சியம்
தத்தமஞ்சி நீர்த்தேக்கத்திற்கு மழைநீர் செல்லும் கால்வாய் பராமரிப்பில் அலட்சியம்
தத்தமஞ்சி நீர்த்தேக்கத்திற்கு மழைநீர் செல்லும் கால்வாய் பராமரிப்பில் அலட்சியம்
தத்தமஞ்சி நீர்த்தேக்கத்திற்கு மழைநீர் செல்லும் கால்வாய் பராமரிப்பில் அலட்சியம்
ADDED : செப் 19, 2025 02:34 AM

பொன்னேரி:காட்டூர் - தத்தமஞ்சி நீர்த்தேக்கத்திற்கு, ஆரணி ஆற்றில் இருந்து மழைநீர் செல்லும் கால்வாய் பராமரிப்பு இன்றி மோசமாக உள்ளது.
பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் - ஆலாடு கிராமங்களுக்கு இடையே, ஆரணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. மழைக்காலங்களில் இந்த அணைக்கட்டில் மழைநீர் தேக்கி வைக்கப்படுகிறது.
அணைக்கட்டு நிரம்பியதும், தேங்கிய மழைநீரை, அங்குள்ள கால்வாய் வழியாக, 6 கி.மீ., உள்ள காட்டூர், தத்தமஞ்சி, வேலுார் ஆகிய ஏரிகளுக்கு கொண்டு சென்று சேமித்து வைக்கப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், 62 கோடி ரூபாயில், காட்டூர் - தத்தமஞ்சி ஏரிகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, கூடுதல் தண்ணீரை சேமிக்கும் வகையில், நீர்தேக்கமாக மாற்றப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட ஏரிகளுக்கு மழைநீர் கொண்டு செல்லும் கால்வாய் பராமரிப்பு இன்றி உள்ளது.
ஆலாடு, சிவபுரம், கொளத்துார் உள்ளிட்ட கிராமங்களில், கால்வாய் முழுதும் செடிகள் வளர்ந்தும், கரைகள் சரிந்தும் உள்ளன.
கால்வாய் பராமரிப்பு இன்றி உள்ளதால், மழைக்காலங்களில் அணைக்கட்டில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், முழுமையாக நீர்தேக்கத்திற்கு சேர முடியாத நிலை உள்ளது.
வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், கால்வாய் பராமரிக்கப்படாமல் இருப்பது விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மழைநீரை சேமிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.