/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/438 ஏக்கர் செஞ்சி ஏரி துார்வாருவதில்... அலட்சியம் ! ஆக்கிரமிப்பில் சிக்கி மாயமாகும் அவலம்438 ஏக்கர் செஞ்சி ஏரி துார்வாருவதில்... அலட்சியம் ! ஆக்கிரமிப்பில் சிக்கி மாயமாகும் அவலம்
438 ஏக்கர் செஞ்சி ஏரி துார்வாருவதில்... அலட்சியம் ! ஆக்கிரமிப்பில் சிக்கி மாயமாகும் அவலம்
438 ஏக்கர் செஞ்சி ஏரி துார்வாருவதில்... அலட்சியம் ! ஆக்கிரமிப்பில் சிக்கி மாயமாகும் அவலம்
438 ஏக்கர் செஞ்சி ஏரி துார்வாருவதில்... அலட்சியம் ! ஆக்கிரமிப்பில் சிக்கி மாயமாகும் அவலம்
ADDED : ஜூன் 06, 2024 06:24 AM

கடம்பத்துார : கடம்பத்துார் ஒன்றியத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி ஏரியில், துார்வாரும் பணியை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டும், நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், இந்த ஏரியை நம்பி, 800 ஏக்கரில் பயிர் செய்யும் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
கடம்பத்துார் ஒன்றியம், செஞ்சி ஊராட்சியில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் செஞ்சி ஏரி உள்ளது. 438 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த ஏரியை நம்பி செஞ்சி, மதுராகண்டிகை, பிலிப்ஸ்புரம், பானம்பாக்கம், வேப்பஞ்செட்டி, சிற்றம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், 800 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த ஏரியில் முறையாக துார்வாரும் பணி நடைபெறாததால், புதருக்குள் மாயமாகி வருகிறது. இதனால், ஏரியில் நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஏரிக்கு வரும் நீர்வரத்துக் கால்வாய் பராமரிப்பில்லாததால், ஆக்கிரமிப்பில் சிக்கி மாயமாகி உள்ளது.
இதனால், இந்த ஏரியை நம்பி 800 ஏக்கரில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிஉள்ளனர்.
மேலும், ஏரியை முறையாக துார்வாராததால், நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், செஞ்சி ஊராட்சி உட்பட சுற்றிஉள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இதனால், கோடைக்காலங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுஉள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
செஞ்சி ஏரி துார்வாரும் பணி குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திலும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் மனு அளித்துள்ளோம்.
அதேபோல், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக பதவி வகித்த பழனிசாமியிடமும், ஏரி துார்வாரும் பணி குறித்து விவசாயிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மனுவை பெற்ற முதல்வர், நடவடிக்கை எடுப்பதாக பதில் கடிதமும் அனுப்பியதாக விவசாயிகள் கூறினர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், 2020ம் ஆண்டு நடந்த குடிமராமத்து பணிகளின் போது கூட துார்வாரும் பணி நடைபெறவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் செஞ்சி ஏரியை ஆய்வு செய்து, துார்வாரும் பணி மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.