/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பொன்னேரியில் தெருநாய்களை பிடித்து தடுப்பூசி போட நகராட்சியில் தீர்மானம் பொன்னேரியில் தெருநாய்களை பிடித்து தடுப்பூசி போட நகராட்சியில் தீர்மானம்
பொன்னேரியில் தெருநாய்களை பிடித்து தடுப்பூசி போட நகராட்சியில் தீர்மானம்
பொன்னேரியில் தெருநாய்களை பிடித்து தடுப்பூசி போட நகராட்சியில் தீர்மானம்
பொன்னேரியில் தெருநாய்களை பிடித்து தடுப்பூசி போட நகராட்சியில் தீர்மானம்
ADDED : மார் 27, 2025 08:41 PM
பொன்னேரி:பொன்னேரி நகரமன்ற கூட்டம், தலைவர் பரிமளம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
நகராட்சி கமிஷனர் எஸ்.கே. புஷ்ரா, கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். கூட்டத்தில், வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய சாலை, கழிவுநீர், குப்பை உள்ளிட்ட பல்வேறு அத்யாவசிய பணிகள் குறித்து கவுன்சிலர்கள் முறையிட்டனர்.
மேலும் கவுன்சிலர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை பதிவு செய்யும்படி வலியுறுத்தினர். 'வீடுகளில் வரி வசூலிக்க செல்பவர்கள் கூடுதல் கட்டணங்களை பெறுகின்றனர், கவுன்சிலர்களின் கவனத்திற்கு வரும்போது அது குறித்து கேட்டால், உரிமையாளர்களிடம் பணத்தை திருப்பி தருகின்றனர். சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் வலியுறுத்தப்பட்டது.
நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் வெறிபிடித்து, பொதுமக்களை கடிப்பதும், அச்சுறுத்துவமாக உள்ளது.
சமீபத்தில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவனை தெருநாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்களின் புகாரை தொடர்ந்து, அரசு அனுமதி பெற்ற நிறுவனத்தின் வாயிலாக, பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை பிடித்து 'ரேபிஸ்' தடுப்பு ஊசி போடவும், கருத்தடை அறுவடை சிகிச்சை செய்வதற்கும் ஐந்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பபட்டது.
*திருத்தணி நகராட்சி அலுவலகத்தில், கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி தலைமையில் நேற்று நடந்தது. ஆணையர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். நகர்மன்ற துணை தலைவர் சாமிராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வரவு- செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து நகராட்சியில் வரி வசூலில் தீவிரம் காட்டி, நிலுவை தொகை வசூலிப்பது மற்றும் நகராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் துரிதப்படுத்துதல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், 18 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். நகராட்சி பொறியாளர் விஜயராஜகாமராஜர் நன்றி கூறினார்.