/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்
கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்
கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்
கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்
ADDED : மார் 25, 2025 07:55 AM
திருத்தணி : திருத்தணி நகராட்சி அலுவலகத்தில், குடியிருப்பு சங்க நிர்வாகிகள், நகர பிளான் பிரிவு பொறியாளர்கள் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதில் நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் பேசியதாவது:
அரசு மழைநீர் சேமிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது. எனவே, நகராட்சியில் உள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீட்டிற்கு, கட்டாயமாக மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும்.
அதேபோல், 21 வார்டுகளில் உள்ள வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலக கட்டடங்களிலும் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும். புதிதாக, வீடுகள் கட்டுவோர் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தால் மட்டுமே, கட்டடத்திற்கு அனுமதி மற்றும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.
எனவே, குடியிருப்பு சங்க தலைவர்கள், நிர்வாகிகள், வியாபாரிகள் மற்றும் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.