/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆட்டோக்கள் 'பார்க்கிங்' அச்சத்தில் வாகன ஓட்டிகள் ஆட்டோக்கள் 'பார்க்கிங்' அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ஆட்டோக்கள் 'பார்க்கிங்' அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ஆட்டோக்கள் 'பார்க்கிங்' அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ஆட்டோக்கள் 'பார்க்கிங்' அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 26, 2025 01:50 AM

கும்மிடிப்பூண்டி, தேசிய நெடுஞ்சாலையோரம் ஆபத்தான முறையில் நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்களை இணைப்பு சாலையில் நிறுத்த போலீசார் வலியுறுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த துராபள்ளம் பஜார் பகுதி மீது மேம்பாலம் செல்கிறது. அவ்வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் மேம்பாலம் மீது சென்று வருகின்றன.
இதனால், ஆந்திரா செல்லும் மார்க்கத்தில், மேம்பாலம் முடியும் இடத்தில் பஸ்கள் நின்று, பயணியரை இறக்கி ஏற்றி செல்கின்றனர். பயணியர் இறங்கும் இடத்தில், அவர்களை ஏற்றி செல்வதற்காக, தேசிய நெடுஞ்சாலையோரம் ஆபத்தாக ஷேர் ஆட்டோக்கள் அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன.
மேம்பால இறக்கத்தில், வேகமாக வரும் வாகனங்கள், ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தி வைத்திருப்பதை கண்டு திக்கு முக்காடி போகின்றன. இதனால் அப்பகுதியில் விபத்து அச்சம் நிலவி வருகிறது.
ஷேர் ஆட்டோக்களை இணைப்பு சாலையில் நிறுத்த, ஆரம்பாக்கம் போலீசார் வலியுறுத்த வேண்டும். அதன் வாயிலாக அப்பகுதியில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.