/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பாலத்தில் 7 இடத்தில் சேதம் வாகன ஓட்டிகள் அச்சம் பாலத்தில் 7 இடத்தில் சேதம் வாகன ஓட்டிகள் அச்சம்
பாலத்தில் 7 இடத்தில் சேதம் வாகன ஓட்டிகள் அச்சம்
பாலத்தில் 7 இடத்தில் சேதம் வாகன ஓட்டிகள் அச்சம்
பாலத்தில் 7 இடத்தில் சேதம் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : செப் 13, 2025 01:21 AM

திருத்தணி:திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில், கோரமங்கலம் நந்தியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலத்தில் ஏழு இடங்களில் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில், கோரமங்கலம் அருகே நந்தியாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே, 2012ம் ஆண்டு, திருத்தணி நெடுஞ்சாலைத் துறை சார்பில், நான்கு கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.
இப்பாலத்தை நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக பராமரிக்கவில்லை. இதனால், பாலத்தின் மீது அமைக்கப்பட்ட கான்கிரீட் மற்றும் தார்ச்சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
பாலத்தின் ஏழு இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். சில நேரங்களில், இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தை கவனிக்காமல் செல்லும் போது, தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து, பலமுறை நெடுஞ்சாலைத் துறையினரிடம் புகார் அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேநிலை தொடர்ந்தால், உயர்மட்ட பாலத்தின் உறுதிதன்மை பாதிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, கோரமங்கலம் உயர்மட்ட பாலத்தை கலெக்டர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.