/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அசுர வேகத்தில் கனரக வாகனங்கள் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் அச்சம் அசுர வேகத்தில் கனரக வாகனங்கள் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் அச்சம்
அசுர வேகத்தில் கனரக வாகனங்கள் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் அச்சம்
அசுர வேகத்தில் கனரக வாகனங்கள் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் அச்சம்
அசுர வேகத்தில் கனரக வாகனங்கள் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : மே 20, 2025 09:54 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் நகரில் ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை போக்குவரத்துக்கு பிரதானமாக உள்ளது. இச்சாலை வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இதில், 'டாரஸ்' லாரிகள், சவுடு மண் லோடுடன் அசுர வேகத்தில் சாலைகளில் செல்கின்றன. அதிகம் லோடு எடுத்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், சாலையில் பயணிக்கும் மற்ற வாகனங்களின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் அசுர வேகத்தில் செல்கின்றன.
இவ்வாறு செல்லும் டாரஸ் லாரிகள் அனைத்தும், அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றிச் செல்கின்றன. அதிக பளு காரணமாக சாலை சேதமடையும் நிலை உள்ளது. மேலும், அசுர வேகத்தில் செல்லும் லாரிகளால், விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.
பாதசாரிகளும், சைக்கிள் போன்ற இருசக்கர வாகன ஓட்டிகள், டாரஸ் மண் லாரிகளை பார்த்து அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. அசுர வேகத்தில் செல்லும் லாரிகளையும், அதிக பாரம் ஏற்றிச் செல்வதையும், வட்டார போக்குவரத்து துறையினரோ, காவல் துறையினரோ கண்டுகொள்வதில்லை என, வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி, அதிக பாரம் ஏற்றி அசுர வேகத்தில் செல்லும் லாரி ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்க வேண்டும் என, திருவள்ளூர் எஸ்.பி.,க்கு, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.