/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ புதிய பேருந்து நிலைய பணியை விரைந்து முடிக்க கண்காணிப்பு அலுவலர் உத்தரவு புதிய பேருந்து நிலைய பணியை விரைந்து முடிக்க கண்காணிப்பு அலுவலர் உத்தரவு
புதிய பேருந்து நிலைய பணியை விரைந்து முடிக்க கண்காணிப்பு அலுவலர் உத்தரவு
புதிய பேருந்து நிலைய பணியை விரைந்து முடிக்க கண்காணிப்பு அலுவலர் உத்தரவு
புதிய பேருந்து நிலைய பணியை விரைந்து முடிக்க கண்காணிப்பு அலுவலர் உத்தரவு
ADDED : ஜூன் 13, 2025 02:35 AM

திருவள்ளூர்:திருவள்ளூரில் 32 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியை விரைந்து முடிக்க, மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் ராஜாஜி சாலையில், தற்போது செயல்பட்டு வரும் திரு.வி.க., பேருந்து நிலையம், குறுகிய இடத்தில் இயங்கி வருகிறது. இதனால், ஒரே சமயத்தில் 10 பேருந்துகள் கூட நிறுத்த முடியவில்லை. பேருந்து நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழி, குறுகலாக இருப்பதால், பேருந்துகள் உள்ளே சென்று, வெளியில் வர சிரமப்படுகின்றன.
இதையடுத்து, திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் உள்ள வேடங்கிநல்லுாரில், 5 ஏக்கர் பரப்பளவில், புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி 32 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது.
புதிய பேருந்து நிலையத்தில், 107 கடைகள், கழிப்பறை, பயணியர் அமரும் இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டுமான பணி நடந்து வருகிறது. மேலும், ஒரே சமயத்தில், 50 பஸ்கள் நிற்கும் அளவிற்கு விசாலமாக அமையும்.
கட்டுமான பணியை தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கார்த்திகேயன், கலெக்டர் பிரதாப் உடன் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டார். பின், பேருந்து நிலைய பணியினை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
கர்ப்பிணியருக்கு உதவிகள் கிடைக்கிறதா? மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திருத்தணி:திருத்தணி நகராட்சியில் நேற்று தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கார்த்திகேயன், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் ஆகியோர் பல்வேறு துறைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
திருத்தணி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் மகப்பேறு அறை, வெளிநோயாளிகள் பிரிவு, மருந்தகம் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கார்த்திகேயன் கர்ப்பிணிகளிடம் அரசு செயல்படுத்துகின்ற திட்டங்கள் சரியான நேரத்தில் உங்களுக்கு கிடைக்கின்றதா என கேட்டறிந்தார்.
தொடர்ந்து திருத்தணி-அரக்கோணம் சாலையில் நகராட்சி சார்பில், 12.74 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு பேருந்து நிலையத்தை பார்வையிட்டு, பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
நகராட்சி மற்றும் ஊராட்சிகளில், துாய்மை பணி பராமரிக்கவும், சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், தெரு விளக்குகள் எல்.இ.டி., பல்புகளாக மாற்றிடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நிகழ்வில், திருத்தணி நகராட்சி பொறியாளர், காமராஜ், ஆர்.டி.ஓ., கனிமொழி, வேளாண்மை இணை இயக்குநர் கலாவதி பல்வேறு துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.