/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கேழ்வரகு, எள், துவரை, கொய்யா உற்பத்தியில் தமிழகம் முதலிடம் அமைச்சர் நாசர் தகவல் கேழ்வரகு, எள், துவரை, கொய்யா உற்பத்தியில் தமிழகம் முதலிடம் அமைச்சர் நாசர் தகவல்
கேழ்வரகு, எள், துவரை, கொய்யா உற்பத்தியில் தமிழகம் முதலிடம் அமைச்சர் நாசர் தகவல்
கேழ்வரகு, எள், துவரை, கொய்யா உற்பத்தியில் தமிழகம் முதலிடம் அமைச்சர் நாசர் தகவல்
கேழ்வரகு, எள், துவரை, கொய்யா உற்பத்தியில் தமிழகம் முதலிடம் அமைச்சர் நாசர் தகவல்
ADDED : ஜூன் 14, 2025 02:01 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி செல்லியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று, கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்த முகாமில், திருவள்ளூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், திருவள்ளூர் காங்., - எம்.பி., சசிகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்று பேசியதாவது:
தமிழகம் முழுதும் சிறப்பு கால்நடை சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டு, 26 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதுவரை ஐந்து வேளாண் பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில், 1.94 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நான்கு ஆண்டுகளில் உணவு தானிய உற்பத்தியில், 458 லட்சம் மெட்ரிக் டன் என்ற இலக்கை எட்டியுள்ளது.
பாசன நிலப்பரப்பு 36.07ல் இருந்து, 38.33 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. சிறுதானியங்களான கேழ்வரகு, எள், துவரை மற்றும் கொய்யா உற்பத்தியில், தமிழகம் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
மக்காச்சோளம் மொத்த எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பின் இரண்டாம் இடமும் குரு தானியங்கள் மற்றும் நிலக்கடலையில் மூன்றாவது இடமும் பிடித்துள்ளது.
தமிழகம் முழுதும் பயிர் காப்பீட்டு திட்டத்தில், 32 லட்சம் விவசாயிகளுக்கு, 5,720 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், விவசாயிகளுக்கு பரிசுகள், தீவன விதைகள், தாது உப்பு கலவைகள், மாட்டுத்தீவனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார்.