/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பேரம்பாக்கம் ஏரியில் மாயமாகும் கனிமவளம் பேரம்பாக்கம் ஏரியில் மாயமாகும் கனிமவளம்
பேரம்பாக்கம் ஏரியில் மாயமாகும் கனிமவளம்
பேரம்பாக்கம் ஏரியில் மாயமாகும் கனிமவளம்
பேரம்பாக்கம் ஏரியில் மாயமாகும் கனிமவளம்
ADDED : செப் 03, 2025 03:19 AM

பேரம்பாக்கம்:பேரம்பாக்கம் ஏரியில் விதிமீறி சவுடு மண் அள்ளப்படுவதால் கனிமவளம் மாயமாகி வருவதோடு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் பகுதியில் சர்வே எண். 406ல் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது.
இந்த ஏரியில் அரசு உத்தரவுப்படி கடந்த 10 தினங்களுக்கு முன் சவுடு மண் அள்ளும் பணி துவங்கியது.
இங்கு அள்ளப்படும் சவுடு மண் சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இங்கு நீர்வள ஆதாரத்துறை உத்தரவுப்படி 160 மீட்டர் நீளம், 170 மீட்டர் அகலம் மற்றும் 130 மீட்டர் நீளம் 97 மீட்டர் அகலம் என இரு இடங்களில் 3 அடி ஆழத்தில் சவுடு மண் எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால் அதிகாரிகள் உத்தரவை மீறி 10 அடி ஆழம் வரை சவுடு மண் அள்ளும் பணி நடந்து வருகிறது.
மேலும் அதிகாரிகள் உத்தரவிட்ட பகுதியை தவிர பிற இடங்களிலும் சவுடு மண் அள்ளும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தாலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே கலெக்டர் சவுடு மண் அள்ளும் பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேரம்பாக்கம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.