/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/சோளிங்கரில் மாசி மகம் தெப்ப உற்சவம்சோளிங்கரில் மாசி மகம் தெப்ப உற்சவம்
சோளிங்கரில் மாசி மகம் தெப்ப உற்சவம்
சோளிங்கரில் மாசி மகம் தெப்ப உற்சவம்
சோளிங்கரில் மாசி மகம் தெப்ப உற்சவம்
ADDED : பிப் 24, 2024 12:17 AM

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவிலில்அருள்பாலித்து வருகிறார். யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாளுக்கு, மாசி மகம் தெப்பல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதையொட்டி இன்று 24ம் தேதி முதல் நாளை மறுதினம் 26ம் தேதி வரை தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. இந்த தலத்தின் பிரம்ம தீர்த்தம் என அழைக்கப்படும் தக்கான் குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறும்.
யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள், இன்று முதல் நாளை மறுதினம் வரை மாலை 5:00 மணிக்கு, ஊர்க்கோவிலில் இருந்து தக்கான் குளத்திற்கு எழுந்தருளுகிறார். 6:00 மணி முதல் 8:00 மணி வரை தெப்பலில் வலம் வருகிறார்.
lவேலுார் மாவட்டம், வள்ளிமலை கோவிலின் மாசி மாத பிரம்மோற்சவத்தில், கடந்த 20ம் தேதி மாலை துவங்கிய தேர் உற்வசம், நேற்று மாலை நிறைவடைந்தது. 20ம் தேதி மாலை 5:00 மணிக்கு புறப்பட்ட தேர், கிரிவல பாதையில் உள்ள கிராமங்களின் வழியாக, கடந்த நான்கு நாட்களாக வலம் வந்தது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நிறைவாக நேற்று மாலை கோவில் நிலைக்கு தேர் வந்து சேர்ந்தது. பக்தர்கள், அரோகரா கோஷம் முழங்க, வள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமானை வணங்கினர்.
இன்று சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு, வள்ளி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. நாளை 25ம் தேதி சங்காபிஷேகத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.