/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 10 ஆண்டாக போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்தவர் சிக்கினார் 10 ஆண்டாக போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்தவர் சிக்கினார்
10 ஆண்டாக போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்தவர் சிக்கினார்
10 ஆண்டாக போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்தவர் சிக்கினார்
10 ஆண்டாக போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்தவர் சிக்கினார்
ADDED : செப் 14, 2025 11:07 PM

மீஞ்சூர்:கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்து தலைமறைவாகி, 10 ஆண்டுகளாக போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்து வந்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எண்ணுாரைச் சேர்ந்த ஜான்சன், 37, என்பவர் 2014ம் ஆண்டு, தொழில் போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாக, அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக, மீஞ்சூர் போலீசார், அத்திப்பட்டைச் சேர்ந்த சீனிவாசன், 35, உட்பட நான்கு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
கடந்த 2015ல் ஜாமினில் வெளிவந்த சீனிவாசன், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் போலீசாருக்கு 'டிமிக்கி' கொடுத்து வந்தார். குடும்பத்தினருடன் தலைமறைவானதால், 10 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர்.
இதையடுத்து, ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவின்படி, மீஞ்சூர் காவல் ஆய்வாளர் வேலுமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அத்திப்பட்டு பகுதியில் சீனிவாசன் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.
பின், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.