/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பராமரிப்பு இல்லாத சிறு மின்விசை குழாய்பராமரிப்பு இல்லாத சிறு மின்விசை குழாய்
பராமரிப்பு இல்லாத சிறு மின்விசை குழாய்
பராமரிப்பு இல்லாத சிறு மின்விசை குழாய்
பராமரிப்பு இல்லாத சிறு மின்விசை குழாய்
ADDED : ஜன 12, 2024 09:50 PM

ஆர்.கே.பேட்டை:வங்கனுாரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது அன்னியம்மன் கோவில். இந்த கோவில் வளாகத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், ஒன்றிய கவுன்சிலர் நிதியில், சிறுமின்விசை குழாய் அமைக்கப்பட்டது. இந்த குழாயில் கிடைக்கும் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பதால், கிராமத்தினர் இங்கிருந்து, குடங்களில் தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.
இதனால், ஏராளமானோர் பகல் முழுதும் இங்கு, சைக்கிள்களில், பிளாஸ்டிக் குடங்களை எடுத்து க்கொண்டு இங்கு வந்து செல்கின்றனர்.
வங்கனுார் மட்டும் இன்றி 4 கி.மீ., துாரம் தள்ளியுள்ள ஆர்.கே.பேட்டையில் இருந்தும் பகுதிவாசிகள் வந்து தண்ணீர் பிடித்து செல்வது வழக்கமாக உள்ளது.
சிறப்பான இந்த சிறுமின்விசை குழாய் தற்போது பராமரிப்பு இன்றி, புதர் மண்டி சீரழிந்து வருகிறது.
தொடர்ந்து, 10 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வரும் இந்த சிறுமின்விசை குழாயை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என பக்தர்களும், பகுதிவாசிகளும் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.