/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பூட்டியே கிடக்கும் மத்துார் நல்வாழ்வு மையம்பூட்டியே கிடக்கும் மத்துார் நல்வாழ்வு மையம்
பூட்டியே கிடக்கும் மத்துார் நல்வாழ்வு மையம்
பூட்டியே கிடக்கும் மத்துார் நல்வாழ்வு மையம்
பூட்டியே கிடக்கும் மத்துார் நல்வாழ்வு மையம்
ADDED : ஜன 27, 2024 11:32 PM

திருத்தணி,திருத்தணி ஒன்றியம், மத்துார் ஊராட்சியில், மத்துார் - பொன்பாடி செல்லும் சாலையில், 12,50 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு துணை சுகாதார நிலையம் - நல்வாழ்வு மையம் புதிய கட்டடம் கட்டி, கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன், அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.
இந்நிலையத்தில் ஒரு செவிலியர் நிரந்திரமாக தங்கியிருந்து, கர்ப்பிணியருக்கு முதலுதவி மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், இரவு நேரத்தில் மத்துார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அவசர சிகிச்சைக்கு வருபவோருக்கு முதலுதவி அளித்து, கொத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் புதிய கட்டடம் திறந்து பயன்பாட்டிற்கு விடப்பட்டும் செவிலியர் நிரந்தரமாக தங்காமல் அவ்வப்போது கடமைக்காக வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் மத்துார் துணை சுகாதார நிலையத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு விடுவதுடன், செவிலியர் நிரந்தரமாக தங்குவதற்கும் உத்தரவிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.