ADDED : செப் 02, 2025 12:42 AM
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே பாத்தப்பாளையம் கிராமத்தில், அரசு மதுக்கடை இயங்காத நேரங்களில், கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் அப்பகுதியில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அதே பகுதியை சேர்ந்த தனசேகர், 38, என்பவர் வீட்டின் அருகே மது விற்றது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் எட்டு குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.