/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/தாலுகா அலுவலக சாலையில் குவிந்துள்ள குற்ற வழக்கு வாகனங்களுக்கு விமோசனம்தாலுகா அலுவலக சாலையில் குவிந்துள்ள குற்ற வழக்கு வாகனங்களுக்கு விமோசனம்
தாலுகா அலுவலக சாலையில் குவிந்துள்ள குற்ற வழக்கு வாகனங்களுக்கு விமோசனம்
தாலுகா அலுவலக சாலையில் குவிந்துள்ள குற்ற வழக்கு வாகனங்களுக்கு விமோசனம்
தாலுகா அலுவலக சாலையில் குவிந்துள்ள குற்ற வழக்கு வாகனங்களுக்கு விமோசனம்
ADDED : பிப் 24, 2024 08:02 PM

பொன்னேரி:பொன்னேரி தாலுகா அலுவலக சாலையில், குற்றவியல் நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் ஆகியவை உள்ளன.
குற்றவியல் நீதிமன்றம் அருகே உள்ள காலி இடத்தில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய டிராக்டர், லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
இவை பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிற்பதால் துருப்பிடித்தும், அவற்றில் மரம் செடிகள் வளர்ந்தும் கிடக்கின்றன. இந்த வாகனங்களால் மேற்கண்ட சாலையில் உள்ள நீதிமன்றங்கள், சப்-கலெக்டர் அலுவலகம் வருபவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடமின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கு வாகனங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலைய வளாகங்களுக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதைத் தொடர்ந்து, தற்போது, மேற்கண்ட வழக்கு வாகனங்களை, காவல் நிலையங்களை சார்ந்தவர்கள் கொண்டு செல்லும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகனங்கள் துருப்பிடித்து கிடப்பதால், கிரேன் உதவிடன் அவற்றை துாக்கி, கண்டெய்னர் லாரிகளில் வைத்து எடுத்துச் செல்லும் பணி துவங்கப்பட்டுள்ளது.
வழக்கு வாகனங்கள் அங்கிருந்து அகற்றப்படும் நிலையில், நீதிமன்றம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வருவோருக்கு பயனுள்ளதாக அமையும். காவல் நிலைய அதிகாரிகள் துரிதமாக, அவற்றை கொண்டு செல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.