Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ முன்னாள் படைவீரர்களுக்கு சட்ட உதவி மையம் துவக்கம்

முன்னாள் படைவீரர்களுக்கு சட்ட உதவி மையம் துவக்கம்

முன்னாள் படைவீரர்களுக்கு சட்ட உதவி மையம் துவக்கம்

முன்னாள் படைவீரர்களுக்கு சட்ட உதவி மையம் துவக்கம்

ADDED : செப் 05, 2025 02:13 AM


Google News
திருவள்ளூர்:முன்னாள் படைவீரர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, மாவட்ட சட்டப் பணி உதவி மையம் துவக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைய உத்தரவின்படி, முன்னாள் படைவீரர்களின் பிரச்னைகளுக்கு சட்டப்பூர்வ ஆலோசனை வழங்கிட, மாவட்ட சட்டப் பணிகள் உதவி மையம், திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் துவக்கப்பட்டுள்ளது.

வாரந்தோறும் புதன் கிழமை காலை 10:00 மணி முதல், பகல் 1:30 மணி வரை இவ்வலுவலகம் செயல்பட்டு வரும். திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், சட்டப்பூர்வ ஆலோசனை பெற அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us