/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் திருத்தணியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
திருத்தணியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
திருத்தணியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
திருத்தணியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 09, 2025 10:41 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் பெரியகடம்பூரைச் சேர்ந்த உதயகுமார், 40, என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அன்பழகன் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக, மூன்று நாட்களுக்கு முன், இரு தரப்பைச் சேர்ந்தவர் களும் மோதிக் கொண்டனர்.
இரு தரப்பினர் கொடுத்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, மூன்று பேரை கைது செய்து, 8 பேர் மீது வழக்கு பதிந்தனர்.
நேற்று வழக்கறிஞர் அன்பழகன் மீது போலீசார் பொய் வழக்கு போட்டதாக கூறி, திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் நுழைவாயிலில், 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.