Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நிலம் அளவீடு பணி துவக்கம் பெண்கள் குவிந்ததால் பரபரப்பு

நிலம் அளவீடு பணி துவக்கம் பெண்கள் குவிந்ததால் பரபரப்பு

நிலம் அளவீடு பணி துவக்கம் பெண்கள் குவிந்ததால் பரபரப்பு

நிலம் அளவீடு பணி துவக்கம் பெண்கள் குவிந்ததால் பரபரப்பு

ADDED : செப் 07, 2025 12:53 AM


Google News
Latest Tamil News
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த ராமநாதபுரம் ஊராட்சியில் 79 ஏக்கர், அம்மம்பாக்கம் ஊராட்சியில் 51 ஏக்கர் என, மொத்தம் 130 ஏக்கர் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது.

இந்த இரண்டு ஊராட்சிகளில் உள்ள நிலங்களும், வனத்துறைக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட நிலம் என, வரையறுக்கப்பட்டு உள்ளதாக, வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், வருவாய்த் துறை பதிவேட்டில், 'மேய்க்கால் புறம்போக்கு நிலம்' எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இரண்டு ஊராட்சிகளிலும் உள்ள சுடுகாட்டிற்கு சடலங்களை எடுத்து செல்லவும், வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால், இரு ஊராட்சிகளில் யாராவது இறந்தால், சடலத்தை எடுத்து செல்லும் போது மோதல் ஏற்படும் நிலை இருந்தது.

இருதரப்பினர் பேச்சு நடத்தி, சடலங்களை எடுத்து சென்றனர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில், இரண்டு ஊராட்சிகளில் உள்ள, 130 ஏக்கர் நிலங்களில், ஆடு, மாடுகள் மேயவும், சடலங்களை எடுத்து செல்லவும் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

நேற்று, இரண்டு ஊராட்சிகளிலும் இடங்கள் அளவீடு செய்யும் பணி துவங்கியது. தகவல் அறிந்து கிராம பெண்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us