/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பாண்டூர் காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் பாண்டூர் காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்
பாண்டூர் காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்
பாண்டூர் காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்
பாண்டூர் காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 09, 2025 11:50 PM
திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாண்டூர் கிராமத்தில் பழமை வாய்ந்த விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.
பல நுாற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவில் பராமரிப்பின்றி, காணப்பட்டது. இதையடுத்து கிராமவாசிகள் அந்த கோவிலை புனரமைப்பு செய்தனர்.
கட்டுமான பணி நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா கடந்த, 8ம் தேதி விநாயகர் பூஜையுன் துவங்கியது. தொடர்ந்து, யாக பூஜை, திருவிளக்கு வழிபாடு நடந்தது.
நேற்று கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர், விநாயகர், நடராஜர் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் தொடர்ந்து கலசாபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு திருக்கல்யாண உத்சவம் நடந்தது.
நிகழ்ச்சியில், பாண்டூர், கன்னங்காரணி, கனகவல்லிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.