/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மணல் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ.வுக்கு மிரட்டல்மணல் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ.வுக்கு மிரட்டல்
மணல் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ.வுக்கு மிரட்டல்
மணல் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ.வுக்கு மிரட்டல்
மணல் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ.வுக்கு மிரட்டல்
ADDED : ஜன 24, 2024 10:52 PM
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம், பூனிமாங்காடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுபவர் பிரதாப், 30. இவர், நேற்று காலை பூனிமாங்காடு மதுரா வீரராகவபுரம் கிராமத்திற்கு சான்றிதழ் விசாரணைக்காக, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து, தமிழக எல்லையான கிருஷ்ணாபுரம் சாலையில் மணல் ஏற்றியபடி டிராக்டர் ஒன்று வந்து கொண்டிருந்தது. சந்தேகம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் டிராக்டரை மடக்கினார்.
பின், மணல் கொண்டு வருவதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என ஓட்டுனர் நாகராஜனிடம் விசாரணை நடத்தியதில், உரிய அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் டிராக்டரை பறிமுதல் செய்ய முயன்ற போது, ஓட்டுனர் நாகராஜன் திடீரென கிராம நிர்வாக அலுவலரை கையால் தாக்கியும், கொலை மிரட்டல் விடுத்தும், கிழே தள்ளிவிட்டு டிராக்டரை எடுத்துச் சென்றார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பிரதாப், தாசில்தாரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
பின், திருத்தணி தாசில்தார் மதன் அளித்த புகாரின்படி, கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து, நாகராஜனை தேடி வருகின்றனர்.