/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு போலீஸ் பூத் அமைக்க கோரிக்கை குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு போலீஸ் பூத் அமைக்க கோரிக்கை
குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு போலீஸ் பூத் அமைக்க கோரிக்கை
குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு போலீஸ் பூத் அமைக்க கோரிக்கை
குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு போலீஸ் பூத் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 02, 2025 11:11 PM
கும்மிடிப்பூண்டி கவரைப்பேட்டையில் ரயில் நிலைய சாலை, ராஜா தெரு, பழவேற்காடு தெரு உட்பட ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
இங்கு இயங்கி வந்த காவல் நிலையம், 2018ம் ஆண்டு 8 கி.மீ., தொலைவில் தச்சூர் பகுதியில் உள்ள புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.
அதன்பின், கவரைப்பேட்டை பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டதாக பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால், கவரைப்பேட்டை பகுதியில், சட்டம் - ஒழுங்கு பாதித்து, குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்கள், அதிகளவில் கூடும் கவரைப்பேட்டை ரயில் நிலைய பகுதியில், சமூக விரோதிகள் சிலர், போதை பொருட்களை விற்பதாகவும் கூறப்படுகிறது.
கவரைப்பேட்டை மக்களின் பாதுகாப்பு கருதி, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பொது இடத்தில், போலீஸ் பூத் அமைக்க வேண்டும். அதில், போலீசாரை நியமித்து, 24 மணி நேரமும் கவரைப்பேட்டை பகுதியை கண்காணிக்க வேண்டும்.
குற்ற சம்பவங்களை தடுக்க, கவரைப்பேட்டை பகுதியில் 'சிசிடிவி' கேமரா அதிகளவில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.