/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருவள்ளூரில் புத்தக கண்காட்சி துவக்கம்திருவள்ளூரில் புத்தக கண்காட்சி துவக்கம்
திருவள்ளூரில் புத்தக கண்காட்சி துவக்கம்
திருவள்ளூரில் புத்தக கண்காட்சி துவக்கம்
திருவள்ளூரில் புத்தக கண்காட்சி துவக்கம்
ADDED : பிப் 24, 2024 08:00 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், 3வது புத்தக கண்காட்சி நேற்று துவங்கியது. கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலையில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி புத்தக கண்காட்சியை துவக்கி வைத்து பேசியதாவது:
புத்தகம் வாசிப்பது ஒரு அற்புதக் கலை. அந்த கலையினை குழந்தைகள் பள்ளி பருவத்தில் இருந்தே வாசித்து பழகிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகளுக்கு கற்பனை வளம், சிந்திக்கும் திறமை உருவாகும்.
கல்வி ஒன்று தான் உங்கள் வாழ்நாளில் அழியாத செல்வம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் - வளர்ச்சி, சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மற்றும் சட்டசபை உறுப்பினர்கள், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் பங்கேற்றனர்.
இந்த புத்தக திருவிழா, மார்ச் 4 வரை, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது.
இதில், 110 அரங்குகளில், பலதரப்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களுக்கு, 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும். மாணவர் மற்றும் பொதுமக்களுக்கு, அறிவியல் அறிவை துாண்டும் வகையில் கோளரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
தினமும், பல்வேறு சொற்பொழிவாளர்கள் பங்கேற்று, பல்வேறு உறை மற்றும் பட்டிமன்றங்களில் பேச உள்ளனர்.