ADDED : ஜூன் 19, 2025 07:02 PM
திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டம் திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில், நேற்று 20 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் இலவச மூன்று சக்கர ஸ்கூட்டர், 37 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா போன்ற நலதிட்ட உதவிகளை திருத்தணி தி.மு.க.,-எம்.எல்.ஏ., சந்திரன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், துணை தாசில்தார் தேவராஜ், முதுநிலை வருவாய் ஆய்வாளர் கமல் உள்பட பலர் பங்கேற்றனர்.