ADDED : பிப் 10, 2024 08:52 PM
கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் சந்திப்பில், சிப்காட் போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர்.
குளிர்பானங்களுக்கு இடையே பதுக்கி எடுத்துச் சென்ற, 250 கிலோ குட்கா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடத்திய, மாதர்பாக்கம் அடுத்த பூதுார் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ், 39, என்பவரை கைது செய்து ஷேர் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.