ADDED : மார் 18, 2025 09:19 PM
திருத்தணி:ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக, சென்னைக்கு குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று திருத்தணி போலீசார், பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தை சோதனை செய்த போது, 9 கிலோ குட்கா பொருட்களை, சென்னையைச் சேர்ந்த முருகன், 48, என்பவர் பையில் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு, 20,000 ரூபாய். முருகனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.