/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சலபாசனத்தில் கும்மிடி மாணவர்கள் சாதனை சலபாசனத்தில் கும்மிடி மாணவர்கள் சாதனை
சலபாசனத்தில் கும்மிடி மாணவர்கள் சாதனை
சலபாசனத்தில் கும்மிடி மாணவர்கள் சாதனை
சலபாசனத்தில் கும்மிடி மாணவர்கள் சாதனை
ADDED : மே 19, 2025 02:29 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் வினாஸ்ரீ யோகா மைய மாணவர்கள் சார்பில், அங்குள்ள தனியார் பள்ளியில் உலக சாதனை நிகழ்வு நடந்தது.
யோகா பயிற்சி மைய நிறுவனர் காளத்தீஸ்வரன், பயிற்சியாளர் வித்யா முன்னிலையில், யோகா மைய மாணவர்கள் 54 பேர், தொடர்ந்து 100 நிமிடங்கள் சலபாசனத்தில் ஈடுபட்டனர்.
இவர்களது சாதனை, 'நோவா' உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
நோவா உலக சாதனையின் நிர்வாக ஆசிரியர் ராஜ்குமார், மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.