/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சிறு மழைக்கே குளமான கும்மிடி ஜி.என்.டி., சாலை சிறு மழைக்கே குளமான கும்மிடி ஜி.என்.டி., சாலை
சிறு மழைக்கே குளமான கும்மிடி ஜி.என்.டி., சாலை
சிறு மழைக்கே குளமான கும்மிடி ஜி.என்.டி., சாலை
சிறு மழைக்கே குளமான கும்மிடி ஜி.என்.டி., சாலை
ADDED : மார் 22, 2025 11:37 PM

கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி பகுதியில், நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில், வெயிலின் தாக்கம் குறைந்து மேக மூட்டம் சூழ்ந்து, ஒரு மணி நேரம் மழை பெய்தது.
அதன்பின், வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. மழை பெய்த சுவடு கூட பல இடங்களில் தெரியாத நிலையில், கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையோரம் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி குளமாக தேங்கியது.
இதுகுறித்து பகுதிவாசிகள் கூறுகையில், 'மழைநீர் வடிந்து செல்லும் பகுதி உயரமாக இருப்பதால், வடிந்து செல்ல வழியின்றி தேங்கியதாக கூறுகின்றனர். மாநில நெடுஞ்சாலை துறையினர், மழைநீர் வடிந்து செல்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும்' என்றனர்.