/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குரூப் - 4 இலவச மாதிரி தேர்வு போட்டியாளர்களுக்கு அழைப்பு குரூப் - 4 இலவச மாதிரி தேர்வு போட்டியாளர்களுக்கு அழைப்பு
குரூப் - 4 இலவச மாதிரி தேர்வு போட்டியாளர்களுக்கு அழைப்பு
குரூப் - 4 இலவச மாதிரி தேர்வு போட்டியாளர்களுக்கு அழைப்பு
குரூப் - 4 இலவச மாதிரி தேர்வு போட்டியாளர்களுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 16, 2025 11:23 PM
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், குரூப் - 4 போட்டி தேர்வுக்கு, இலவச மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, டி.என்.பி.எஸ்.சி., - டி.என்.யூ.எஸ்.ஆர்.பி., போன்ற முகமைகளால், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் - 4 காலி பணியிடங்களுக்கான தேர்வு, ஜூலை 12ம் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகள், வரும் 24, ஜூலை 2, 9ம் தேதிகளில், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
இத்தேர்வை எழுத விருப்பம் உள்ள போட்டி தேர்வர்கள் https://forms.gle/1UFTVEhV23SVZqaC8 என்ற 'கூகுள்' படிவத்தில், தங்களுடைய விபரங்களை வரும் 23க்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 044 - -2766 0250, 84898 66698 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.